Friday, April 4, 2014

சினிமா என் காதலி - (எடிசனுக்குத் தெரிய வேண்டாம் !!!)

                       நான் எழுதப் போகும் கட்டுரைகளை சினிமா விமர்சனங்கள் என்று கூறுவது சரியாயிராது. உண்மையில் திரைப்படங்களை விமர்சிக்க வேண்டும் எனும் நோக்கத்திலே இவற்றினை நான் எழுதிடவில்லை. ஒரு பாமர ரசிகனின் பார்வையிலிருந்து, படங்கள் அவனது மனதிலே ஏற்படுத்தும் தாக்க அலைகளைப் பதிவு செய்யும் முயற்சியே இது. இங்கே நான் பகிர்ந்துகொள்பவை என்னுடைய கருத்துகளேயன்றி, இவைதான் சரியென்று நான் கூறவில்லை. திரைப்படங்களைப் பற்றி என்னுடையதிலிருந்து வேறுபட்ட அல்லது என்னுடையதைவிட மேம்பட்ட புரிதல்களைக் கொண்ட ரசிகர்களின் கருத்துகள், இவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபடலாம். எனக்குள்ளே இருக்கும் சினிமா ரசிகனுடன் உரையாடிக் கொள்வதற்கும், என்னுடைய அலைவரிசையிலேயே இரசனைகள் கொண்ட நண்பர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்குமான எனது ஓர் எட்டுதான் இந்தத் தீற்றல்கள். இன்னொரு முக்கியமான விஷயம். நான் பேசப்போகும் படங்களின் கதைகளை ஆங்காங்கே நான் எழுதியிருக்கிறேன். எனவே, படத்தின் கதை தெரிந்து போவதினால், சஸ்பென்ஸ் போய்விடும் என்று நினைப்பவர்கள் பொறுத்தருள்க. ஏற்கனவே, படம் பார்த்தவர்கள் இவற்றினைப் படித்தால் அந்தக் குறை இருக்காது. உங்களது மேலான மறுமொழிகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

Thursday, January 6, 2011

Thamarai pootha thadaakam: நான் நடக்கும் போது,என்னைக் குடையாகப் பயன்படுத்துக...

Thamarai pootha thadaakam: நான் நடக்கும் போது,
என்னைக் குடையாகப் பயன்படுத்துக...
: "நான் நடக்கும் போது, என்னைக் குடையாகப் பயன்படுத்துகிறது என் செருப்பு. என் குடையோ, என்னை செருப்பாகக் கொள்..."
நான் நடக்கும் போது,
என்னைக் குடையாகப் பயன்படுத்துகிறது 
என் செருப்பு. 
என் குடையோ,
என்னை செருப்பாகக் கொள்கிறது.

Monday, December 13, 2010

எப்படிப் புரிய வைப்பேன் அவளுக்கு,
குழந்தையைப் பயமுறுத்த
அவள் காட்டும் முகபாவங்கள்
அவளை மேலும்
அழகாகுகின்றனவேயன்றி
பயமுறுத்துவதில்லை என்று?

Monday, October 4, 2010

பிளாக்கர் இல் பதிப்பிப்பது, ஒரு தாய் பிள்ளையைப் பெற்றெடுப்பதை விடக் கடினமான காரியமாய் உள்ளது. ப்ரோசீஜர்ஸ் எல்லாம்  மாத்துங்கப்பா............!!!!!!!!

Thursday, September 30, 2010

manmathan suzhi

                                                             மன்மதன் சுழி
        பொதுவாக   அனைவரும் எதையாவது எழுதத் தொடங்கும் முன் பிள்ளையார் சுழி இடுவார்கள். ஆனால் நான் பேசப் போவது காதலைப் பற்றி என்பதால், மன்மதன் சுழி இட்டிருக்கிறேன். பொதுவாக நம்மில் பலருக்கு அடுத்தவர் கடிதத்தைப் படிப்பதில் ஓர் தனி ஆர்வம் இருக்கும். இங்கே "நம்மில் பலருக்கு என்ற பிரயோகம் நாகரிகம் கருதி தானாகவே வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். பாதி சிங்கம் பாதி மனிதனாக அவதரித்த  நரசிம்ம பகவானைத் தவிர, முழு மனிதனாகவே பிறந்த நம் அனைவருக்குமே இந்த திருட்டு மாங்காயை ருசிக்கும் புத்தி சிறிதளவேனும் இருக்கும். அடுத்தவர் கடிதத்தைப் படிக்கும் அளவுக்கு அனைவரும் செல்வதில்லை என்றாலும், அடுத்தவர் கைப்பேசியில் உரையாடல் குறுஞ்செய்திகளைப் படிப்பது, புத்தகத்தில் அடித்து விடப் பட்ட பெயரைப் படிக்க முயல்வது, குறுக்கு உரையாடல்களை (கிராஸ் டாக்?!) உற்றுக் கேட்பது போன்றவை எல்லாம் நாம் அனைவரும் செய்வது தானே? எதற்கிந்தப் பீடிகை? சொல்கிறேன்.
                     இப்படி அங்குமிங்குமாய் கிடைக்கும் ரகசியங்களை அறிவதிலேயே இவ்வளவு சுவாரஷ்யம் இருக்கும் போது, ஒரு காதல் கடிதத் தொகுப்பே படிக்கக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி இரு காதலர்களின் காதல் கடிதத் தொகுப்பு தான் இந்தப் படைப்பு. இந்த முன்னுரைக்கு நீங்கள் தரும் பதிலைப் பொறுத்தே இதைத் தொடரலாமா, வேண்டாமா என்பதை நான் முடிவு செய்ய வேண்டும்.
                                                                                                                                 தோழமையுடன்,
                                                                                                                          நிலவின்காதலன்,
                                                                                                                      வெ.திருஞான சம்பந்தம்